Wednesday 30 September 2015

செழிக்கட்டும் பண்பாடு

செழிக்கட்டும் பண்பாடு....






"அன்பால் வந்தோரையும், வருவோரையும் வாழவைக்கவும், 
 இருப்பவர்களை நேசிக்கவும், இல்லாதவர்களுக்கு உதவிடவும்,
 இயலாதவர்களை ஆதரிக்கவும், விருந்தினரை உபசரிக்கவும்,

ஒற்றுமையாய் சுற்றமும்,  நட்பும், ஊராரும் 
ஒருங்கிணைந்து வாழ உணர்த்திடும்
எம் தமிழ் பண்பாட்டிற்கு ஈடு ஏதும் இவ்வுலகில் உண்டோ?


சீரழிந்த சமுதாயத்தை சீர்திருத்தம் செய்ய 
நம் முன்னோர் காட்டிய அற வழி அல்லவா அவை!

வாயில்லா ஜீவனையும் வயிறாற கவனித்து
குடும்ப உறுப்பினாராக்கும் பெருந்தன்மை தமிழனிடமே,

அரசும், வேம்பின் காற்றும் அருமருந்தென
தெய்வமாய் வழிபட்டு உலகிற்கு காட்டியது நம் பண்பாடு,

அரைகுறை உடையாய் பார்ப்பவர் கண்ணுறுத்தாமல்
அம்சமாய் தழைய தழையவென பட்டுடுத்தி வரும் 
எம்குல பெண்கள் நடந்துவந்தால் தேர் போல தோன்றுமே, 

கோமாளியாய் வேசம் போடாமல் 
வெம்மையாய் வேட்டி அணிந்து  எம் ஆண் மகன்கள் 
கம்பீரமாய்  நடந்தால் ஊரே கையெடுத்து வணங்குமே,

" எப்படியும் வாழலாம் என்றில்லாமல்
  இப்படித்தான் வாழனும் "
  என்று வரையறை வகுத்தது தமிழ்பண்பாடே,

ஏனோ இவையெல்லாம்
நாகரிகம் என்ற பெயரில் காணாமல் தான் போய்விட்டது,

 மறுபடியும் பண்பாடு செழித்தால் தான்
 இவ்வுலகு இன்னும் செழிக்கும்...........





இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் .நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-4 புதுக்கவிதைப் போட்டிக்காகவே (முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை) எழுதப்பட்டது. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன். 


நன்றி .சுபிதா தீபா 


இது எனது முதல் பதிவு.......

                                                                    உ

வணக்கம். இது எனது முதல் பதிவு.



" அழகாய் பிரகாசமாய்

      வெளிவரும் சூரியனைப் போல்

               இனிதே விடியலாகட்டும் எனது வலைப்பதிவு "