Sunday 1 November 2015

உளறல்கள் தொடரும்

பெண்ணே......

பெண்ணே உன்னை 
என்னவென வர்ணிப்பது?

காற்றென மிதமாய் 
வருடவும் செய்கிறாய்,
புயலென கோரமாய் 
அடிக்கவும் செய்கிறாய்,


அலையென 
தழுவவும் செய்கிறாய்,
பேரலையாய்
அழிக்கவும் செய்கிறாய்,

தீபமாய் 
ஒளிரவும் செய்கிறாய்,
காட்டுத் தீயாய் 
மிரட்டவும் செய்கிறாய்,

மழையாய் 
குளிரவும் செய்கிறாய்,
இடியாய்
தாக்கவும் செய்கிறாய்,

இயற்கைக்கும் உனக்கும் 
ஏதோ தொடர்பு உள்ளது,
ஆக்கலும் அழித்தலும்
இரண்டற கலந்துள்ளது உன்னில்...

என்னவோ புரியாத புதிராய் தான் இருக்கிறாய் நீ .......
============================================================
மழைத்துளியே......

மழைத்துளியே
என்ன வேணும் உனக்கு?
மேலிருந்து கீழே விழுகிறாய்,

மண்ணில்
பல கோலங்கள் இடுகிறாய்,

கடல், நதி  என அவற்றுள்
சங்கமித்துக்கொண்டாய்,

ஆட்டமும் பாட்டுமாய்
அப்படி என்ன குதூகலம் உனக்கு,
சந்தோச ஆர்பரிப்போ?

யாரைத் தேடி பூமிக்கு வந்தாய்?

உன் தேடல்
கிடைக்கவில்லையென
வானம் சென்றாயோ?

இல்லை
கிடைத்துவிட்டதென
மையம் கொண்டாயோ?

ஏதோ சொல்ல வந்து
சொல்லாமல் சென்றுவிட்டாயோ?

மறுபடியும்  நீ  பூமிக்கு  வந்து 
என் கேள்விக்கு விடைக் கூறிவிட்டு செல்லேன்.....







2 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு சுபி...

    ReplyDelete
  2. ஹே அதுக்குள்ள இங்க கமென்ட்ஸ் போட்டாச்சா, தாங்க்ஸ் டா.

    ReplyDelete