Thursday 15 October 2015

எனக்கு தெரிந்த சின்ன சின்ன மருத்துவ குறிப்புகள்:


1. எலுமிச்சை:-
      
    * தலையில் பொடுகு இருந்தால் எலுமிச்சைச் சாறை சிறிது நீரில் கலந்து
      தலையில் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறவைத்து அலசினால் 
      பொடுகு சரியாகிவிடும், முடி உதிர்தலும் குறையும்.

   *  அதே போல் தலைக் குளித்ததும் கடைசி கப் தண்ணீரீல்
       எலுமிச்சையைச் சாறை  சேர்த்து  தலைமுடி அலசினால் 
       முடிக் கொட்டுவது குறையும். முடியும் பளப் பளப்பாக  இருக்கும்.

2)  வேப்பிலை: - 

   * தலையில் பேன் தொல்லை இருந்தால் வேப்பிலையை அரைத்து
      தலையில் 15  நிமிடம் ஊற வைத்து அலசினால் பேன்தொல்லை 
      போய்விடும்.
   
   *  வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில்
       தலைமுடி அலசினால் முடிக் கொட்டுவது  குறையும்.

   *  வேப்பிலையை அரைத்து கால் பித்த வெடிப்பு உள்ள இடங்களில்
      தடவினால்  சீக்கிரம் சரியாகிவிடும்.

   *  முகப் பரு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.

   *  முக்கியமாக அம்மை  நோய்க்கு சிறந்த கிருமி நாசினி.
 

   *   சிறிது வேப்பிலையை  4, 5, மிளகுடன் சாப்பிட  வைரஸ் காய்ச்சல் வராமல்
        பாதுகாத்துக் கொள்ளலாம்.



3) வெந்தயம் : 

*  வெந்தயத்தை  முதல் நாள் இரவு ஊறவைத்து அதை மறு நாள்
   வெறும் வயிற்றில் மென்று சாப்பிட  உடல் உஷ்ணம் குறையும்.  
   வயிற்று புண்ணுக்கு நல்லது. 

*   நீரிழிவு  நோய் வராமல் தடுக்கும்.  ஏற்கனவே இருந்தால்  
    அதைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
    வறுத்து பொடி செய்து வைத்து தினமும் நீரில் கலந்தும் சாப்பிடலாம்.

*  மாதவிலக்கு ஏற்படும் போது வரும் வயிற்று வலி குறையும்.

*   வெந்தயத்தை முதல் நாள் ஊறவைத்து மறு நாள் அரைத்து 
     தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளித்தால் 
     உடல் குளிர்ச்சி அடையும், முடிக் கொட்டுவது  நிற்கும்.
     முடி நன்கு அடர்த்தியாக வளரும். 





  நெய்;-

*   தொண்டை வலியினால் அவதிபடுவோர் நெய்யுடன் சிறிது ஜீனி சேர்த்து        
    தொண்டையில் படும் படி சாப்பிட்டால் வலி பெருமளவு குறையும்.

*  தொண்டை புண் சரியாகும்.

*  நெய்யினை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் 
    அமிலத் தன்மையை சமன்செய்து வயிறு புண் ஆவதை தடுக்கும்.
    ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

*   உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.





தொடரும்...............



5 comments:

  1. குறிப்புகள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  2. சுபி
    யூஸ்புல்லான குறிப்புகள் தேங்க்ஸ் மா

    ReplyDelete